மீளாத் துயிலில்!

“நிமிர்ந்த நெஞ்சமும் நேர் கொண்ட பார்வையும் நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நெறிகளும்” என்ற பாரதியின் வார்த்தைகளின் உயிர்ச்சிற்பம்! நமது புரட்சித் தலைவி அம்மா! திண்ணிய  நெஞ்சமும் தெளிந்த நல்லறிவும் கொண்டு நல்லாட்சி புரிந்த வீரப்பெண்மணி! எடுத்த பணி  முடிக்காமல் உறங்காத நீங்கள்! இன்று  எடுத்த பணி முடிக்காமல் மீளாத்துயில்  கொண்டதேனோ? அன்னையில்லா வீடு ஒளியிழந்தது போல நீங்கள் இல்லாத தமிழ்நாடும்  ஒளியிழந்து கிடக்கிறது! சுற்றமென்று சொல்ல  சுற்றி யாருமில்லை! இருந்தும் உம்மக்கள் நாங்கள் என்று! சொல்லாமல் சொல்கிறதம்மா!…