நெஞ்சிருக்கும் வரை – 3

அத்தியாயம் – 3

அவனைப் பார்த்தவள் அதிர்ந்து நின்றாள். “சிவா” என அவளது உதடுகள் அழுந்த உச்சரித்தது.

“பரவால்லியே. என் பேர நல்லா நியாபகம் வைச்சு இருக்க?”

அவள் கோபமாக திரும்பினாள்.

“நில்லு. எங்க போற?”

“இது உங்க ஸ்கூல் அப்படின்னு தெரிஞ்சு இருந்தா நான் இங்க வொர்க் பண்ணியே இருக்க மாட்டேன். ச்சே” என்று அவள் வெளியேறப் போக,

“சோ உனக்கு என் மேல தான் அக்கறை இல்லைன்னு நினைச்சேன். பட் உன் ஸ்டூடெண்ட்ஸ் மேல கூட இல்லை. இல்லையா?”

“என்ன ஒளர்றீங்க?”

“பின்ன. நீ போய்ட்டா பசங்க பாவம் இல்லையா? புது ஸ்டாப் போடற வரை கஷ்டம், அத சொன்னேன். எனக்கு கூட என் மனைவி வேலை செய்யறது பிடிக்கல. சோ நீ போயி உடனே ரெசிக்னேசன் லெட்டெர் கொண்டு வா”

“லிசன், நான் இந்த ஸ்கூல் இல்லாட்டி கூட இன்னொரு ஸ்கூல்ல வொர்க் பண்ணிப்பேன். உங்களுக்கு நான் நோடீஸ் பீரியட் தரேன். நீங்களே ஸ்டாப் அரேஞ் பண்ணிக்கோங்க” என்றவள் வெளியேறியேவிட்டாள்.

கோபத்தில் கண் மண் தெரியாமல் நடந்து வந்தவள், நேராக ரெஸ்ட் ரூம் சென்று முகம் கழுவ போக,

“இந்த பவித்ரா ஈஸ்வர் சார் வைப்ன்னு இன்னிக்கு தான் தெரியுது. எவ்ளோ கமுக்கமா இருந்து இருக்கா பாரேன்” என்று ரேகா சொல்ல,

“காலைல அவ என்ன கடுப்படிச்சுட்டு போறப்பவே நான் சந்தேக பட்டு இருக்கணும். என்ன போட்டுகுடுத்துட்டு இப்ப என் வேலையே போச்சு ரேகா” என்ற ரம்யா சொன்னாள்.

“ஏய். நீ மானுவ கிள்ளுனது தான் பிரச்சனை. பவித்ரா இல்ல. அவ அழுத அழுகைல நீ மாட்டிக்கிட்ட”

இந்த உரையாடலை கேட்டவள், “என்ன மானுவ கிள்ளுனாளா?” என்று கோபமடைந்த பவித்ரா,

“உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா என் பொண்ண கிள்ளி இருப்ப?” என்று கத்த,

அதில் அதிர்ந்து இருவரும் திரும்பி பார்த்தனர்.

“இல்ல பவித்ரா மேடம், அது….”

“என் மேல கோபம் இருந்தா நீ என்கிட்ட காட்டனும். நீ மானுவ கிள்ளி இருக்க. அவ தப்பு பண்ணி இருக்க மாட்டா. எனக்கு தெரியும்.”

“இல்ல மேடம்” என்று அவள் ஆரம்பிக்க, அதே நேரம் மற்ற ஸ்டாப்ஸ் சிலர் வர, பவித்ரா அங்கிருந்து நகர்ந்தாள்.

அடுத்த அரை மணி நேரத்தில், பவித்ரா யார்ரென்று அனைவருக்கும் தெரிந்தது.

அனைவரும் அவளைப் பார்த்த பார்வையில், தற்போது பயம் கலந்த மரியாதை கூடி இருந்தது.

அன்று மாலை சிறப்பு கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது ஈஸ்வரால்.

ஹாலில் அனைவரும் கூடி இருக்க, பவித்ரா செல்ல மறுத்துவிட்டாள். அவள் கூடவே, நித்யாவும் இருக்க, கூட்டம் ஆரம்பமானது.

“சோ. உங்க எல்லாருக்கும் மிசர்ஸ் பவித்ரா யாருன்னு தெரிஞ்சு இருக்கும். இங்க சில தவறுகள் நடப்பதாக எனக்கு சில கம்ப்ளைன்ட் வந்துச்சு. அத சரி பண்ண, யார அனுப்பலாம் அப்படின்னு யோசிச்சேன், எனக்கு நம்பிக்கையான ஆளாவும் அவங்க இருக்கணும். அதே சமயம், நான் மேரேஜ் பண்ணிகிட்ட விஷயம் சிலருக்கு மட்டும் தான் தெரியும்.”

“சோ நான் பவித்ராவ அனுப்பினேன்.”

“இப்ப எனக்கு சில விஷயங்கள் கிளியர் ஆய்டுச்சு. நானே இன்னிக்கு சில விஷயங்கள சொல்ல முடிவு பண்ணி இருந்தேன். பட். அதுக்குள்ள உங்களுக்கு ரீச் ஆய்டுச்சு”

“சோ, இனி இந்த பள்ளி நிர்வாகத்தை என் மனைவி பவித்ரா எடுத்து நடத்துவாங்க. இனி அவங்க தான் கரஸ்பாண்டெண்ட்.”

“என் மனைவிக்கு இந்த பீல்ட் தான் பிடிச்சு இருக்கு. சோ எல்லாரும் அவங்களுக்கு உங்க சப்போர்ட்ட குடுங்க” என்றவன், செல்லில் நித்யாவிற்கு மெசேஜ் அனுப்பினான்.

அடுத்த 5 வது நிமிடம், பவித்ராவுடன் நித்யா உள்ளே வர, அனைவரும் எழுந்து நின்று மரியாதை தெரிவிக்க, “இது என்ன புது தொல்லை” என பவித்ரா மனதிற்குள் எண்ணினாள்.

அவள் முகத்தில் தெரிந்த குழப்பத்தை உணர்ந்த ஈஸ்வர், “பவி, இங்க வா” என்றான்.

பல்லைக் கடித்துக்கொண்டு அவனருகே செல்ல, நித்யா அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்தாள்.

“சோ. இந்த பள்ளியின் புதிய கரஸ்பாண்டெண்ட்டை வருக வருக என வரவேற்கிறேன்” என்று சொல்லி அவளுக்கு ஒரு ரோஜா பூங்கொத்தை பரிசளித்தான்.

அனைவரும் கைத்தட்ட, சூழ்நிலை காரணமாக அவள் புன்னகைத்து ஏற்றுக்கொண்டாள்.

“சோ. பவித்ராவின் அறிக்கை படி, சில மாற்றங்கள் பள்ளியில் நாளை முதல் ஏற்படுத்தப்படுகிறது” என்று சொன்னவன் பொதுவான விசயங்களை மட்டும் பேசி கூட்டத்தை முடித்தான்.

கூட்டம் முடிந்து அனைவரும் கிளம்ப, நித்யா ஓடிவந்து அவளைக் கட்டிக்கொண்டாள். “கங்கிராட்ஸ்” என்றாள்.

அவளை ஒரு முறை முறைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள் பவித்ரா.

மாலை பள்ளி முடிந்து, வீட்டிற்கு கிளம்ப, மானு ஏறி ஸ்கூட்டியில் நின்றது. அதே நேரம், ஈஸ்வர் அங்கு வந்து, “பேபி, டிரைவ் போலாமா?” என்று கேட்க, வேகமாக கீழே இறங்கி, “அம்மா பாய்” என்று சொல்லிவிட்டு அவன் கைகளில் ஏறிக்கொண்டது.

இருவரும் செல்ல, “ஏய் பாக்” என்று பவித்ரா கத்தினாள்.

இருவரும் கண்டு கொள்ளாமல் போய் காரில் ஏறினர். “ரெண்டு பேரும் ஒன்னு சேர்ந்தா இந்த உலகமே கண்னுக்கு தெரியாது” என்று சொல்லிக்கொண்டே வண்டியை எடுக்க, அங்கிருந்த நித்யா உட்பட சில ஆசிரியர்கள் அவளைப் பார்த்து புன்னகைத்தனர்.

அனைவருக்கும் ஒரு புன்னகையை பரிசளித்தவள், வேக வேகமாக கிளம்பினாள்.

வெளியே வந்து நின்ற சுந்தரம், மானுவை காணாது, “என்னம்மா. மானு எங்கே?”

“வருவாப்பா” என்றவள் அவளறையில் புகுந்தாள். சில நிமிடங்கள் கழித்து வந்தவள், “அப்பா” என்க,

அதற்குள் நித்யாவிடம் பேசிய சுந்தரம், லலிதாவிடம் அன்றைய நிகழ்வை தெரிவித்துக்கொண்டிருக்க, அவள் அழைப்பில் இருவரும் திரும்பி அவளைப் பார்த்தனர்.

“என்னம்மா?”

“மானு அப்பாவோட முழு பேர் என்னப்பா?”

சுந்தரம் அமைதியாக பதிலளித்தார், “சிவேஸ்வர்”

— நெஞ்சம் மீளும்.

Copy Right to Shrijo

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s