நெஞ்சிருக்கும் வரை – 2

அத்தியாயம் – 2

வழக்கம் போல் வண்டியை எடுத்துக்கொண்டு மகளுடன் பள்ளிக்கு புறப்பட்டாள். மகளை வகுப்பில் விட்டுவிட்டு அவள் ஸ்டாப் ரூமிற்கு செல்ல, ரம்யா வந்தாள்.

“என்ன பவி மேடம், இன்னிக்கும் லேட் போல”

“ஆமாம் ரம்யா மேம். டிராபிக்” என்று சொல்லிக்கொண்டே அமர்ந்து வேலையைப் பார்க்க, ரம்யா நித்யாவிடம் வந்தாள். “நித்யா இன்னிக்கு நம்ம ஈஸ்வர் சார் வர்றாராம். நீ பார்த்ததில்லைல”

“ம்ம்.”

“ரொம்ப ஹேண்ட்சம் கை. அவருக்காக நான் 1 இயரா வெயிட் பண்றேன். இன்னிக்கு வந்தா உடனே பிரபோஸ் பண்ண போறேன்”

“ஹோ.”

“என்ன ஹோ? ஒரு ஆல் தி பெஸ்ட் சொல்லலாம்ல”

“சாரி பா. எனக்கு இந்த லவ்வே பிடிக்காது”

“பவி மேடம், இன்னும் கொஞ்ச நாள்ல நான் இந்த ஸ்கூல்க்கே ஓனர் ஆகப்போறேன்”

“ஹோ”

“என்ன மேடம். நீங்களும் இப்படியே சொல்லறிங்க?”

அங்கு வந்த ரேகா, “நீ வேற ரம்யா. அவங்களே ஹஸ்பன்ட் இல்லாம இருக்காங்க. கொஞ்சம் பொறாமையா இருக்கும்ல”

“ஏய்” என நித்யா எழுந்தேவிட்டாள்.

அவளை தடுத்த பவித்ரா, “விடு நித்தி. சண்டை வேண்டாம்”

“பாருடா. அவங்களுக்கே உறைக்குது. உனக்கு என்ன நித்யா?” என்று ரம்யா கேட்க,

“ஒரு டீச்சர் எப்படி இருக்கணுமோ அப்படி இரு. ஈஸ்வர் சார் வரட்டும், உனக்கு இருக்கு” என்று நித்யா கூறிக்கொண்டே, பவியை பிரேயர் ஹாலுக்கு இழுத்துச் சென்றாள்.

“ஏண்டி அவ தான் சொல்றா அப்படின்னா, நீயும் இப்படி இருக்கற”

“பார்த்துக்கலாம் விடு” என்று அவள் வகுப்பு மாணவர்களின் பின் சென்று நின்றாள்.

பிரேயர் முடிந்து, அனைவரும் அவரவர் வகுப்பிற்கு செல்ல, பவியும் புறப்பட, நித்யாவிற்கு இருப்பு கொள்ளவில்லை. அவளது செல்லை எடுத்து நோண்ட ஆரம்பித்தாள்.

மானுவின் வகுப்பிற்கு சென்ற ரம்யா, அன்று மானசா தாகமெடுக்க தண்ணீர் குடித்தாள். அதைக் கண்ட ரம்யா, காலையில் பவித்ராவின் செய்கையை நினைவில் கொள்ள, அடுத்த நிமிடம், “ஹே மானசா”

“மிஸ்”

“என்ன பண்ற? தண்ணி வேணும்னா கேட்டு தான குடிக்கணும்”

“மிஸ்” என்று அவள் பயத்தில் திணற,

“பர்ஸ்ட் எந்திரி”

எழுந்து நின்ற குழந்தையை, “இங்க வா” என்றாள்.

அருகில் வந்த குழந்தையின் கன்னத்தைக் கிள்ள, “அம்மா” என்று அழ ஆரம்பித்தது.

அதே நேரம் வகுப்பின் முன் நிழலாட நிமிர்ந்த ரம்யா ஆனந்த அதிர்ச்சி அடைந்தாள். பின்னே அவள் எண்ணத்தின் நாயகன் அவள் முன்னே நின்று கொண்டு இருந்தால் அவளுக்கு சந்தோசமாக தானே இருக்கும்.

“ஈஸ்வர் வந்ததும் என்ன பார்க்க வந்து இருக்கார்” என்று அவள் உள்ளுக்குள் மகிழ,

“தன்னை கிள்ளிய மிஸ், புன்னகைப்பதை பார்த்த மானசா மெல்ல மிஸ்ஸின் பார்வையைப் பின்பற்றி பின்னே திரும்ப, ஈஸ்வரைப் பார்த்ததும் “அப்பா” என்று சொல்லிக்கொண்டே மானசா அவனிடம் ஓடினாள்.

அதில் ரம்யா அதிர்ந்து நிற்க,

“கம் டூ மை கேபின்” என்று சொல்லிவிட்டு அவன் வேக வேகமாக குழந்தையை தூக்கிக்கொண்டு சென்றான்.

மாற்று ஆளை ஏற்பாடு செய்துவிட்டு, வேகவேகமாக ஈஸ்வரின் அறைக்கு சென்றாள்.

“மே ஐ கமின் சார்”

“எஸ்”

உள்ளே நுழைய, குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு அவன் போனில் யாருடனோ பேசிக்கொண்டு இருந்தான்.

“ரகு எனக்கு நாளைக்கு தீம் பார்க் கிளோஸ் ஆகணும். பேபிக்கு நாளைக்கு அங்க போகணுமாம். நீ நான் சொன்னத செய்” என்று அவன் பிஏ ரகுவிற்கு கட்டளை பிறப்பித்துக்கொண்டு இருந்தான்.

தந்தையின் மடியில் அமர்ந்து கொண்டு மானு சாக்லேட் சாப்பிட்டுக்கொண்டு இருந்தது.

செல்லை அணைத்தவன், “லிசன். உங்கள டிஸ்மிஸ் பண்ணிட்டேன். நீங்க போகலாம்”

“சார்?”

“குழந்தைங்க கிட்ட இப்படி பிஹெவ் பண்ற மிஸ் இந்த ஸ்கூல்க்கு தேவை இல்லை.”

“சார்?”

“கெட் லாஸ்ட்’ என்றவன் இன்டெர்காமில் பிரின்சியை அழைத்து, “மேடம், மிஸ். ரம்யாவ டிஸ்மிஸ் பண்ணிட்டேன். பார்மாலிட்டீஸ் முடிச்சுடுங்க” என்றவன் செல்லில், “நித்யா. அப்படியே பவிய கூட்டிட்டு வா” என்று செல்லை அணைத்தான்.

அவள் அங்கேயே நிற்பதைப் பார்த்த ஈஸ்வர், “உங்கள வெளிய போக சொன்னதா நியாபகம்” என்க அவள் நகர்ந்தாள்.

பவியின் வகுப்பின் முன் நின்றவள், “பவி” என்க,

“என்ன நித்தி?”

“நம்மல ஈஸ்வர் சார் கூப்பிடறார்”

“சரி வரேன்” என்றவள், “ஸ்டூடெண்ட்ஸ் இந்த சம் காப்பி பண்ணிட்டு, நெக்ஸ்ட் சம் லைன் பை லைனா வொர்க் அவுட் பண்ணுங்க” என்றவள் வெளியேறினாள்.

அவன் அறைக்கதவைத் தட்டிய நித்யா, “மே ஐ கமின்?”

“எஸ்”

“அண்ணா எப்படி இருக்கீங்க?”

“நல்லா இருக்கேன் மா. தேங்க்ஸ் மா. நீ கால் பண்ணது நல்லதா போச்சு”

“என்னன்னா சொல்றிங்க?”

“நான் போறப்ப ரம்யா மானு குட்டிய கிள்ளிகிட்டு இருந்தாங்க. ரீசன் மார்னிங் இன்சிடென்ட்”

“அச்சோ.”

“அவள டிஸ்மிஸ் பண்ணிட்டேன். நீ என்ன பண்ணு மானுவ கூட்டிட்டு போ. நான் நம்ம பவிய கவனிக்கிறேன்”

“சரிண்ணா.” என்றவள் மானுவை அழைத்துக்கொண்டு வெளியேறினாள்.

அவள் கையில் மானுவைப் பார்த்தவள், “மானு” என்க,

“ஏய். சார் கூப்பிட்டார். நீ போய் பாரு. பாப்பாவ நான் பார்த்துகிறேன்” என்று வேகமாக நகர்ந்தாள். பின்னே அவன் வரவை தெரிவித்தாள், அவள் அங்கு இருக்கவே மாட்டாளே.

அவன் அறைக்கதவைத் தட்டி பெர்மிசன் கேட்டு உள்ளே செல்ல, அவன் முதுகு காட்டி அமர்ந்து இருந்தான்.

“குட் மார்னிங் சார்”

“குட் மார்னிங் பவி” என்று அவன் திரும்ப, அவனைப் பார்த்தவள் ஒரு கணம் அதிர்ந்து நின்றாள்.

அவள் உதடுகள் “சிவா” என அழுந்த உச்சரிக்க,

அவன் எழுந்து நின்றான்.

— நெஞ்சம் மீளும்.

Copy Right to Shrijo

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s