நெஞ்சிருக்கும் வரை!!! — ஸ்ரீஜோ ​​

அத்தியாயம் – 1

சுகமான காலைப் பொழுது. ஆதவன் மெல்ல எட்டி பார்க்க ஆரம்பித்து இருந்தான். சூரிய வெளிச்சம் அறையில் பரவ, மெல்ல கண்விழித்தாள் பவித்ரா. கண்களை கஷ்டப்பட்டு சுழற்றி அறையின் சுவற்றில் மாட்டப்பட்டு இருந்த மணியைப் பார்க்கையில் மணி 6 தாண்டிக்கொண்டு இருந்தது.

வேகமாக எழுந்தவள், அருகில் உறங்கிக்கொண்டு இருந்த மகளை போர்வை போர்த்தி பக்கத்தில் தலையணையை அணைப்பாக வைத்துவிட்டு காலை வேலைகளை முடிக்க கிளம்பினாள்.

கதவைத் திறந்து, வெளியே இருந்த பாலை எடுத்தவள், பிரிட்ஜில் வைத்துவிட்டு குளிக்கப் போனாள்.

அவள் கிளம்பி, உணவு தயார் செய்து, குழந்தையை எழுப்ப. அது மெல்ல சிணுங்கியது.

“மானு. எழுந்துக்கோடா”

“மாத்தேன்”

“என் செல்லம்ல”

“மாத்தேன்”

“அம்மாக்கு லேட் ஆச்சுல்ல பட்டு”

“ம்ம்” என்று சிணுங்கிய குழந்தை எழுந்து கொண்டது.

அதை குளிக்கவைத்து, உணவூட்டி, அவளும் சாப்பிட்டு, குழந்தையை கிளப்பி, வெளியே வந்து ஸ்கூட்டியை எடுத்தாள்.

அவள் செல்லம் சமத்தாக ஏறிக்கொண்டது.

இருவரும் வெளியே இருந்த செக்யூரிட்டியிடம் சொல்லிவிட்டு கிளம்பினர்.

பவித்ரா ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணி புரிகிறாள். மானு என்ற மானசா அவள் செல்ல மகள். பவித்ராவின் பெற்றோர் கோவிலுக்கு சென்று இருக்கின்றனர்.

மானுவும் பவித்ராவின் பள்ளியில் தான் ப்ரீ.கே.ஜி. படிக்கிறாள்.

இருவரும் பள்ளியை அடைந்தனர்.

மானுவை வகுப்பில் விட்டு, பவித்ரா ஸ்டாப்ஸ் ரூம்க்கு சென்றாள்.

அவளைப் பார்த்த நித்யா, “ஹாய் பவி”

“ஹாய் நித்தி”

“இன்னிக்கு லேட் போல?”

“ம்ம். அப்பாவும், அம்மாவும் இல்ல. சோ லேட்”

“சரி வா. பிரேயர் ஹால் போகலாம்”

இருவரும் கிளம்பினர்.

நித்யா, பவித்ராவின் பள்ளி, கல்லூரி, பணித்தோழி. நெருங்கிய தோழிகள் கூட.

பிரேயர் முடிந்து அனைவரும் கலைய, பவித்ரா அவள் வகுப்பிற்குள் நுழைந்தாள். பவித்ரா மேல்நிலை வகுப்புகளுக்கு கணித ஆசிரியை. அவள் இங்கு சேர்ந்து 1 வருடம் ஆகிறது. இதுவரை அவள் பாடத்தில் அனைவரும் 80% மதிப்பெண்களுக்கு கீழ் குறைந்ததில்லை. அனைவருக்கும் பிடித்த ஆசிரியை கூட.

அன்றைய நாள் முடிந்து இருவரும் வீடு திரும்ப, பெற்றோர் வந்து இருந்தனர்.

“தாத்தா” என்று குழந்தை உள்ளே ஓடியது.

“மானு. வா வா வா” என்று அவர் தூக்கிக் கொண்டார்.

“எப்பப்பா வந்தீங்க?”

“மதியம் டா”

“அம்மா எங்கப்பா?”

“உள்ள இருக்கறா?”

“மானுக்கு தாத்தா டிரெஸ் மாத்தி விடுவேனாம்”

“ம்ம். சேரி தாத்தா” என்று அவள் அவருடன் ஓடினாள்.

சுந்தரம் ஒரு ரிட்டையர்ட் பிரின்சிபால். அவர் ஒரு கல்லூரியில் பணியாற்றிக் இருந்தார். 2 வருடங்களுக்கு முன் ரிட்டையர் ஆக இப்போது டியூசன் எடுத்துக்கொண்டு இருக்கிறார்.

லலிதா, அன்றும் இன்றும் என்றும் ஒரு பொறுப்பான குடும்பத் தலைவி.

“அம்மா” என்று குரல் கொடுத்துக்கொண்டே உள்ளே சென்றாள் பவித்ரா.

“வாம்மா. போய் கை கால் முகம் அலம்பிட்டு வா. உனக்கு டீ தரேன்” என்றவர் டிபன் வேலையில் இறங்கினார்.

மாலை ஆறாக, சுந்தரமும், பவித்ராவும் டியூசன் எடுக்க மேலே சென்றனர்.

மாணவர்கள் கூட வர ஆரம்பித்து இருந்தனர்.

மாடியில் ஒரு ஹால் கட்டி, இதற்காகவே உருவாக்கி இருந்தார் சுந்தரம்.

பவித்ராவைப் பொறுத்தவரை நிறைவான வாழ்க்கை. அவளும் மகிழ்ச்சியுடனே இருந்தாள். அவள் உலகம் பெற்றோர் மற்றும் மானசாவுடன் முடிந்தது.

அவளைப் பார்த்து புன்னகைத்த கடவுள், அந்த உலகத்தில் இணைய மற்றுமொரு ஜீவனை அனுப்ப சித்தம் கொண்டார்.

— நெஞ்சம் மீளும்.

Copy Right to Shrijo

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s